பழங்குடியின மக்களின் நலனை தமிழக அரசு காத்து வருகிறது - அமைச்சர் கயல்விழி பெருமிதம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 14ஆவது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.


கோவை: பழங்குடி மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் 14ஆவது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பங்கேற்றார். இதில், மாநகராட்சி ஆணையர் பிரதாப்குமார், நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குநர் செந்தில் குமார், பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நிகழ்வில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பழங்குடி மாணவர்கள் இந்நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.



மேலும், நடனப் போட்டி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.



இந்நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது, காடுகளை பாதுகாப்பதில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியின பிரிவுகள் உள்ளன. இவர்களது நலனுக்காகவும், வாழ்க்கை தர மேம்பாட்டிற்காகவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பழங்குடியின மக்களின் மொழி, கலாச்சாரம் ஓவியம் ஆகியவற்றை பாதுகாக்கவும் மேம்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்காகவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பழங்குடியின மக்கள் தங்களது இடத்திலிருந்து வெளியூர் செல்ல பொதுவாக விரும்ப மாட்டார்கள். அதனால் மற்ற மக்களோடு பின்தங்கி இருப்பார்கள். இந்நிலையில் பழங்குடியின மக்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கும் வகையில், அவர்களுக்கான வருமான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

18 பழங்குடியின மாணவர்களை வெளிநாட்டிற்கு சென்று படிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், பழங்குடியின மக்களுக்காக வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அவர்களை பங்கேற்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் கல்வி கற்பதில் சிக்கலாக உள்ள சாதி சான்றிதழ் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் விரைவாக சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...