கோவையில் விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தீவிரம்!

கருமத்தம்பட்டி அருகேயுள்ள கணபதிபாளையம் பகுதியில் மர்ம விலங்கு தாக்கி கன்று குட்டிகள் இறந்த நிலையில், சிசிடிவி கேமராவில் தாக்கிய விலங்கு சிறுத்தை என்பது கண்டறியப்பட்ட நிலையில், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வனத்துறையினர் 2 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

கருமத்தம்பட்டி அடுத்த கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பொன்னுசாமி. இவரது தோட்டத்தில் இருந்த கன்று குட்டிகள் அடுத்தடுத்து மர்ம விலங்கு தாக்குதல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மர்ம விலங்கை கண்டறிய விவசாயி பொன்னுச்சாமி தோட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. அதில் சிறுத்தை நடமாட்டம் கன்டறியப்பட்டுள்ளது.



வனப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில், சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணபதிபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது குறித்து கோவை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் பதிவாகி இருந்த காலடி தடங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.



அதில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறை சார்பில், இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.



தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது, கடந்த சில நாட்களாக ஆடு மற்றும் கன்று குட்டி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அதனை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தியதில் சிறுத்தை போன்ற உருவம் பதிவாகி பதிவாகி இருந்தது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்து ஆய்வு செய்த வனத்துறையினர் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். மீண்டும் அந்த விலங்கின் நடமாட்டம் தென்பட்டால் கேமராவில் பதிவாகும். அதன் பின்னர் அது சிறுத்தையாக இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கௌசிகா நதி ஓரத்தில் உள்ள தோட்டத்தில் ஏராளமான மான்கள் இருப்பதால் வழி தவறி வந்த சிறுத்தை ஆடு மாடுகளை அடித்திருக்கலாம். உடனடியாக வனத்துறையினர் அது சிறுதையா அல்லது வேறு எந்த வேறு ஏதாவது மிருகமா? என கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வனப்பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருமத்தம்பட்டி கணபதிபாளையம் கிராமத்திற்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...