அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்..!'- அண்ணாமலை அதிரடி

தமிழகத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் தமது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சென்னையில் நடந்த பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி நீடித்து வந்தாலும் இருகட்சிகளுக்கும் இடையேயான உரசல்கள் அவ்வப்போது இருந்துவருகிறது. இதனிடையே, பாஜக தொழில்நுட்ப அணிப்பிரிவு நிர்வாகி நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்த நிலையில், இரு கட்சிகளிடையேயான மோதல் வெளிப்படையாக தொடங்கியது. இருப்பினும், அதிமுக, பாஜக கட்சிகளின் மூத்த தலைவர்கள் கூட்டணி நீடிப்பதாக தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை அமைந்தகரையில் தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினார். மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அதிரடியாக கூறியதாகத் தெரிகிறது.

அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும்.

நான் தேசிய மேனேஜர் அல்ல, கட்சியின் மாநில தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாதபோது நான் ராஜினாமா செய்துவிட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் வருகிற மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் பிஸியாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாமலையின் இந்த முடிவுக்கு கரு. நாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் பதற்றமாக எழுந்து நீங்கள் இப்படி பேசக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து பேசிய மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, உங்களுடைய பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டுள்ளார். தொடர்ந்து, மதுரையை சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதி கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார் என்றும் கூறப்படுகறிது. அப்போது ஏராளமானோர் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் இந்த கூட்டத்தில் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

வானதி சீனிவாசன் கேள்வி

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காந்தி, சரஸ்வதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...