வால்பாறையில் கஞ்சா பறிமுதல் - கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் உள்ள வளையல் கடை அருகே இளைஞர்கள் கஞ்சா உபயோகிப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூவரிடமிருந்து சுமார் 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டபோது சேலத்தை சேர்ந்தசஞ்சய் (வயது19), வால்பாறை மாணிக்கா என்.சியை சேர்ந்த பாலாஜி (வயது19) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் என்றும் மற்றொருவர் புதுத்தோட்டத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 21) வேலைசெய்து வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...