கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது

கோவை கணுவாய் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த பிரவீன் என்ற நபரை தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கணுவாய் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா வாலிபரை தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலில் பேரில், கணுவாய் பகுதியில் தடாகம் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிரவீன் என்பதும், கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 450 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...