கோவையில் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன் - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கோவை நீலிக்கோணம்பாளையத்தில் மதுபோதையில் மனைவி அனிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவர் சின்னதுரையை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையம் மதுரை வீரன் கோயில் பகுதியை சேர்ந்த அனிதா (வயது42). மருத்துவமனை துப்புரவு தொழிலாளி. இவரது கணவர் குமார். இவர்களுக்கு கார்த்திக் (வயது22) என்ற மகன் உள்ள நிலையில் அனிதா, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னதுரை (வயது48) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அனிதா தனது கணவரான சின்னதுரையுடன் இணைந்துஅடிக்கடி மது குடிப்பதும், அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்படுவதும் வழக்கம்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு கார்த்திக் வேலைக்கு சென்று விட, வீட்டில் இருந்த அனிதா மது அருந்தியுள்ளார். இதனிடையே இரவில் வெளியே சென்றிருந்த சின்னதுரை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அனிதா, மதுபோதையில் இருந்த சின்னதுரையை கேவலமாக பேசியதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த சின்னதுரை அனிதாவை தாக்கிய நிலையில்மது போதையில் அனிதாதிரும்ப தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்தசின்னதுரை, அனிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு, அதனை மறைக்க அனிதாவின் உடலை தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டது போல், சேலையின் ஒரு பகுதியை அனிதாவின் கழுத்தில் கட்டி தூக்கு மாட்டி தொங்க விட்டு ஒன்றும் தெரியாததுபோல் வீட்டில் தூங்கியுள்ளார்.

இந்நிலையில்அதிகாலையில்அனிதாவின் தம்பியான முத்து என்பவர் வீட்டிற்கு வந்தபோது அனிதா இறந்த நிலையில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், எதுவும் தெரியாதது போல் அதிர்ச்சியை வெளிபடுத்திய சின்னதுரை, அனிதாவின் உடலை இறக்குமாறு கூற இருவரும் இணைந்து உடலை இறக்கியுள்ளனர்.

மேலும் உடலை அடக்கம் செய்துவிடலாம் என முடிவு செய்த நிலையில், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சின்னதுரையிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அனிதா வயிற்று வலியால் அவதிபட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் முகத்தில் தாக்கியிருப்பதும், கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டிருப்பதும், மூச்சை திணற செய்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அனிதாவின் உறவினர்கள் மற்றும்சின்னதுரையிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், என் மனைவிக்கு எந்த விரோதிகளும் இல்லை, அவர் நல்ல முறையில் தான் இருக்கிறார் எனக்கும் அவருக்கும் எந்த சண்டையும் கிடையாது எனக்கூறியுள்ளார்.

போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என கருதிய சின்ன துரை திடீரென மாயமாகி விட்டார்.

இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சின்னதுரை இன்று சிங்காநல்லூரில் பிடிபட்டார்.

அவரிடம் விசாரித்தபோது, மனைவி அனிதாவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து சின்னதுரையை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...