கோவையில் குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவி - விரக்தியில் குடிமகன் தற்கொலை!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சசிதரன் என்பவர் மதுபோதைக்கு அடிமையானவர். மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அவர் சாணிப்படவுரைக் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி சார்ந்தவர் சசிதரன் (வயது60). மது போதைக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

இந்த நிலையிலே இவர் சம்பவத்தன்று தனது மனைவியிடம் மது பருகுவதற்காக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால் அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிதரன் வீட்டில் இருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்துள்ளார்.

இதனை அறிந்த அவரது குடும்பத்தார், உடனடியாக சசீதரனை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சசிதரன் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குடி குடியை கெடுக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மது குடிக்க பணம் கிடைக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...