சூலூரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் - 4 பேர் கைது

சூலூர் ரயில்வே கேட் அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த மதன்ராஜ் (26), மாதரம்(31),சிவசாமி (48) மற்றும் ராஜா (52) ஆகியோரை போலீசார் கைது செய்து 735 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: சூலூர் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சூலூர் பகுதியில் குட்கா பொருட்களை சிலர் பதுக்கி விற்பனைக்கு செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சூலூர் போலீசார், சூலூர் ரயில்வே ஃபீடர் சாலை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூரைச் சேர்ந்த மதன்ராஜ் (26), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாதரம்(31), அரசூர் பகுதியை சேர்ந்த சிவசாமி (48) மற்றும் சூலூர் பகுதியை ராஜா (52) ஆகிய 4பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 735 கிலோ குட்கா மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற போதைப்பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படுமென போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...