தாராபுரத்தில் தனியார் ஆம்புலன்ஸின் தரம் குறித்து ஆர்டிஓ அதிகாரிகள் திடீர் சோதனை!

தாராபுரம் வட்டாரத்தில் இயங்கி வரும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த சோதனையில் உரிமம் காலாவதியான 2 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து திடீர் சோதனை நடைபெற்றது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து சோதனை மேற்கொள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.



இந்த உத்தரவின் பேரில், தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் 10க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களில் திடீர் சோதனை நடைபெற்றது.



இந்த சோதனையில் உரிமம் காலாவதியான 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.



மேலும், இதுபோன்று உரிய ஆவணம் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதேபோல், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், இரவு நேரங்களில் முகப்பு விளக்கு பயன்படுத்தாமல், இயக்கிய வாகனங்களும் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...