உடுமலை அரசு மருத்துவமனையில் புறநோயாளி சீட்டு வழங்கும் மையத்தை அதிகரிக்க கோரிக்கை!

உடுமலை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான சீட்டு பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், சீட்டு வழங்கும் மையத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான சீட்டு வழங்கும் மையத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள வ.உ.சி.வீதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு அளிக்கப்படுகின்ற இலவச மருத்துவ சேவையை பெறுவதற்காக ஏழை, எளிய, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.



இதனிடையே சிகிச்சை பெறுவதற்கு முன்பு பெயர் மற்றும் வயதை எடுத்துக்கூறி புறநோயாளி சீட்டு வாங்க வேண்டியது அவசியமாகும். அதன் பின்பு வரிசையில் நின்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோயின் தாக்கத்தை மருத்துவரிடம் எடுத்துக்கூறி மருந்து, மாத்திரைகளை பெற்று செல்கின்றனர்.



இந்த நிலையில், புறநோயாளி சீட்டு வழங்கும் மையம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தலா ஒன்று தான் உள்ளது. இதனால் சீட்டு வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதன் காரணமாக நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பருவநிலை மாறுபாடு காரணமாக தற்போது சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் வழக்கத்தை விடவும் கூட்டம் அதிகமாக உள்ளது. மருத்துவரை பார்க்கும் முன்பு புறநோயாளி சீட்டு வாங்க வேண்டும். ஆனால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா ஒரு மையம் மட்டும் உள்ளது.

இதனால் நோயாளிகள் ஒருவர் மீது ஒருவர் உரசிய படி நீண்ட நேரம் வரிசையில் கால் கடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் நோயின் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்புகள் உள்ளது. அத்துடன் கூட்டம் அதிகமாக உள்ளதால் சீட்டு பெற்ற பின்பு மருத்துவரை பார்ப்பதற்கும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு புறநோயாளி சீட்டு வழங்கும் மையத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இதனால் நீண்ட நேரம் நோயோடு காத்திருந்து அவதிக்கு உள்ளாக வேண்டிய அவசியம் இருக்காது. எனவே உடுமலை அரசு மருத்துவமனையில் புறநோயாளி சீட்டு வழங்கும் மையத்தை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதால் மருத்துவமனைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதற்கும் தனி மனித இடைவெளியை கடை பிடிப்பதற்கும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...