மனைவி, குழந்தைகளை பிரிந்த சோகம் - கோவையில் பனியன் நிறுவனத் தொழிலாளி தற்கொலை!

மனைவி, குழந்தைகள் பிரிந்த சோகத்தில், திருப்பூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், கோவை உக்கடத்தில் விஷம் குடித்து மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் பாலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55). இவர் பனியன் கம்பெனியில், கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவன் - மனைவி இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கணவரை பிரிந்த அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட ஜெயக்குமார், கோவை வந்து, உக்கடம் பகுதியில் விஷம் குடித்து மயங்கினார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து இவரது மனைவி லட்சுமி பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...