உடுமலையில் சாலைகளில் மக்காளச் சோளத்தை காய வைக்கும் விவசாயிகள்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை உலர வைக்க போதுமான உலர் களங்கள் இல்லாததால், சாலைகளில் உலர வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், போதுமான உலர்களங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போதுமான உலர் களங்கள் இல்லாததால், விவசாயிகள் அறுவடை செய்த மக்காசோளத்தை சாலைகளில் காய வைத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம்உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள், பருவமழையை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.



நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு நீண்ட, மத்திய, குறுகியகால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை காயவைப்பதற்கு உலர் களங்கள் இல்லை என கூறப்படுகிறது.



இதனால், பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ள பொள்ளாச்சி, திண்டுக்கல் வரை செல்லும் நான்கு வழி சாலையில், உலர்த்தி வருகின்றனர்.



இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு உள்ள நீர் இருப்பு மற்றும் நீர்வரத்திற்கு ஏற்றவாறு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது அறுவடைக்கு தயாராகி விட்டது. அதை அறுவடை செய்து காயவைப்பதற்கு உலர்கள வசதி இல்லை. இதனால் உடுமலை அருகே அமைக்கப்பட்டு வருகின்ற நான்கு வழிச்சாலையில் மக்காச்சோளத்தை காய வைத்து வருகின்றோம்.

இதில் போக்குவரத்து தொடங்கப்படாதது எங்களுக்கு சாதகமாக உள்ளது. இல்லையென்றால் தார்ப்பாய்களை வாடகைக்கு எடுத்து வயல்வெளியில் காய வைக்க வேண்டும். இதற்காக சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி வரும்.

ஏற்கனவே இடுபொருட்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு, ஆள்கூலி உயர்ந்துள்ள நிலையில் அறுவடைக்கு பின்னர் செலவுகளால் வருமானத்தில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை காய வைப்பதற்கு உலர்கள வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.

மேலும் தற்பொழுது குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை விலை நிர்ணயம் செய்யப்படுவது போதுமானதாக இல்லை ஆகையால் ஆதார விலையாக3000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 50,000 செலவு செய்து இருக்கும் நிலையில் 10 ஆயிரம் லாபம் கூட கிடைப்பது இல்லை.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...