உலக கண் அழுத்த நோய் வாரம்: கோவையில் வாகன ஓட்டிகளிடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு!

உலக கண் அழுத்த நோய் வாரத்தையொட்டி, கிளக்கோமா மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் இடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு மாணவ, மாணவிகள் கண் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையை இழக்கும் அபாயம் கொண்டது தான் கிளாக்கோமா என்ற நோய். இந்த கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும்.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் உலக கண் அழுத்த நோய் வாரம் மார்ச் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



இதனை முன்னிட்டு, கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



சரவணம்பட்டி சோதனை சாவடி முன்பாக உள்ள பிரதான சாலையில் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கண் அழுத்த நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...