தாராபுரத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் - விரைவில் திறக்க கோரிக்கை

தாராபுரத்தில் ரூ.2.20 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் பார்வையிட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், இந்த மையத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டடம் தாராபுரம் வசந்தம் நகரில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இதில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை துறை அலுவலகம், வேளாண் பொறியியல் அலுவலகம், வேளாண் வணிக அலுவலகம் உள்பட அனைத்தும் விவசாய துறைகளும், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் செயல்பட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடங்களை உடனடியாக திறப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது பயிர்கள் தொடர்பாக உள்ள சந்தேகங்களை போக்கவும், தொழில்நுட்ப வசதியை பெறவும், வேளாண் இடுப்பொருட்களை பெறவும், ஒரே இடத்தில் அனைத்து தேவைகளையும் பெற இயலும். கட்டிட பணிகள் முடிவடைந்து ஆறு மாதங்கள் ஆனநிலையில் வேளாண்மை மையத்தை திறக்க இதுவரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் அலங்கயம் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில தலைவர் ஏ.காளிமுத்து மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர், “ விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனரிடம் ஆலோசனை பெற்று இடுபொருட்களை பெற்றுக்கொண்டு மீண்டும் வேளாண்மை பொறியியல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் கவுண்டச்சிபுத்தூர் ஊராட்சியில் சேரன் நகரில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, விவசாயிகள் நலக்கருதி, காலம் தாழ்த்தாமல் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...