தாராபுரம் அருகே பால் வண்டி மோதியதில் விவசாயி பலியான சோகம்!

தாராபுரம் அடுத்த தேவநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பால்வண்டி மோதியதில், விவசாயி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார், பால் வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாரபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பால் வண்டி மோதியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



தாராபுரம் அருகே உள்ள சின்னக்கம்பாளையம் வரக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில், செல்லாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்து உடுமலை சாலை வழியாக சின்னக்கம்பாளையம் நோக்கி வந்துள்ளார். அப்போது தேவநல்லூர் அருகே தாராபுரம் நோக்கி வந்த பால் வாகனம் செந்தில்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நிலை தடுமாறி கிழே விழுந்த செந்தில்குமார் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பால்வண்டியை ஓட்டி வந்த காரணம்பேட்டையை சேர்ந்த ஓட்டுனர் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான விவசாயி செந்தில்குமாருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...