ஒப்பந்தப்படி கூலி வழங்காததால், பொது வேலைநிறுத்தம் செய்யப்போவதாக விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் அறிவிப்பு!


கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு குறைத்து வழங்கப்படும் கூலியை ஒரு வார காலத்திற்குள் பெற்று தராவிட்டால் பொது வேலை நிறுத்தம் செய்யப்போவதாக விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி தெரித்துள்ளார்.



கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் 2014ம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பேச்சு வார்த்தை அடிப்படையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி வழங்க வேண்டிய ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில் மந்த நிலையை காரணம் காட்டி கூலியை குறைத்து வழங்குவதாகவும், இது குறித்து கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது 2011ம் ஆண்டு வழங்கிய கூலியையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பிடித்தம் செய்வதாகவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி குறைக்கப்பட்ட கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் பொதுக்குழு தீர்மானத்தின்படி கால வரையற்ற பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...