கிணத்துக்கடவு அருகே குடும்பத்தகராறால் விபரீதம் - ஒர்க் ஷாப் தொழிலாளி தற்கொலை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முத்துக்கவுண்டனூரில் குடிபழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத்தகராறால், ஓர்க் ஷாப் தொழிலாளி நாராயணசாமி என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கிணத்துக்கடவு அருகே முத்துக்கவுண்டனூரில் உள்ள மாரியம்மன் கோவில்வீதியை சேர்ந்தவர் நாராயண சாமி(வயது49). இவர் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி(வயது44) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதற்கிடையில் நாராயணசாமி மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

மேலும், குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாராயணசாமி பொருட்களை அடித்து உடைத்ததோடு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால், அவரது மனைவி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.



பின்னர் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது துப்பட்டாவால் நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...