கோவை கரும்புக்கடை அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு!

கோவை மாநகராட்சியின் 62வது வார்டுக்கு உட்பட்ட கரும்புக்கடை மற்றும் சாரமேடு பகுதிகளில் முறையாக தண்ணீர் விநியோகிக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கரும்புக்கடை சந்திப்பில் பொதுமக்கள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் கரும்புக்கடை அருகே முறையாக தண்ணீர் விநியோகம் செய்யாத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி 62 வது வார்டுக்கு உட்பட்டகரும்புக்கடை மற்றும் சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள். முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, கரும்புக்கடை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த மறியலில் ஈடுபட்டுள்ள பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து தண்ணீர் வேண்டும் எனக்கூறி முழக்கங்களை எழுப்பினர். மேலும் 62-வது வார்டு கவுன்சிலரை காணவில்லை என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய அப்பகுதி மக்கள், இதுவரை தங்கள் கவுன்சிலர் ரேவதி முரளி கூட தங்களை வந்து சந்திக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

மேலும் சாலைகள் சீரமைக்கப்படாததால் மழை காலங்களில் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தனர். தங்கள் வார்டு கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள், தங்களை சந்திக்காத வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், வார்டு கவுன்சிலர் ரேவதி முரளி நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், லாரி மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...