கோவையில் பீகார் தொழிலாளி மீது தாக்குதல் - டாஸ்மாக் பார் ஊழியர் கைது!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் பீகார் தொழிலாளி திலீப் கேவட்டை தாக்கிய, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டாஸ்மாக் பார் ஊழியர் பிரசன்னகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அருகே காட்டம்பட்டியில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த திலீப் கேவட்(வயது 34). இவர் நேற்று மாலை கணேசபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றுள்ளார்.

அப்போது, அங்கு சப்ளையராக பணிபுரிந்து வரும் சிவகங்கையை சேர்ந்த ஜேசுவின் மகன் பிரசன்ன குமார் (வயது24) என்பவர் வெளியில் இருந்து தண்ணீர்பாட்டில் கொண்டு வந்தது ஏன் என்று கேட்டு வாக்குவாதம் செய்து, திலீப் கேவட்டை அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து திலிப் கேவட்ட அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து பிரசன்னகுமாரை கைது செய்து, நீதிபதி மோனிகா முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...