கோவையில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணி பிரமுகர் உட்பட 4 பேர் கைது

கோவையில் நேற்று நள்ளிரவில் டவுன்ஹால், மாகாளியம்மன் கோயில் ரோட்டில் நடந்து சென்ற 4 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சூர்ய பிரகாஷ், பிரகாஷ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை பூர்விகமாக கொண்ட கெளதம் தனது நண்பர்களான தன்மாய் ஜானா, ஜாகாத் உள்ளிட்டோருடன் மாகாளியம்மன் கோயில் ரோட்டில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சில நபர்கள், வழி விடமாட்டியா என சொல்லி வடமாநில தொழிலாளர்களை தாக்கினர்.

இந்த நிலையில் மர்ம நபர்களால் சக தொழிலாளிகள் நள்ளிரவில் அடித்து துன்புறுத்தப்பட்டதை தெரிந்துகொண்ட வட மாநில தொழிலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கமிஷ்னர் பாலகிருஷ்ணன், வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 294 பி, 323, 506 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், நள்ளிரவில் சூர்ய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ், வேல்முருகன் நான்கு நபர்களை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் பிரகதீஸ், வேல்முருகன் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கைதான முருகன் என்கிற சூர்ய பிரகாஷ், பிரகாஷ் இந்து முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய விவகாரத்தில் இந்து முன்னணியை சேர்ந்த இருவர் கைதான நிலையில், இந்து முன்னணி அமைப்பினருக்கு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...