இடைத்தேர்தலில் பயந்துபோய் தான் திமுக அமைச்சர்கள் விதிமீறலில் ஈடுபட்டனர் - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் பேசிய அவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயந்து போய் தான் திமுக அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கி விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தல் அதிமுக 40 தொகுதியிலும் வெல்லும் எனவும் தெரிவித்தார்.



கோவை: இடைத்தேர்தலில் பயந்து போய் தான் அனைத்து திமுக அமைச்சர்களும் களத்தில் இறங்கி விதிமீறலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் குனியமுத்தூர் அதிமுக பகுதி கழக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதும் மாணவ மாணவிகளுக்கு இலவச வினா விடை வங்கி புத்தகம் வழங்கப்பட்டது.



இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, ஜெயலலிதா எப்படி திட்டங்களை அளித்தார்களோ, அதனைத் தொடர்ந்து எடப்பாடியார் அளித்தார். வருங்காலத்தில் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வந்து மீண்டும் இந்த திட்டங்களை எல்லாம் தொடர்ந்து வழங்குவார்.

திமுக அரசு அம்மா அளித்த பல திட்டங்களை நிறுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை, அதிமுகவை கண்டும் எடப்பாடியாரை கண்டும் அனைத்து அமைச்சர்களும் இரவு பகலாக மக்களை பட்டியில் வைத்து அடைப்பது போல் அடைத்து பணத்தையும் தங்க காசுகளையும் கொடுத்தார்கள்.

தேர்தல் நடைபெறுகின்ற நாளில் காலை முதல் மாலை வரை விதிமீறல்கள் நடந்தது. அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு விதிமீறல்கள் நடந்தும் கூட மக்கள் அதிமுகவிற்கு 44 ஆயிரம் வாக்குகளை எடப்பாடியாரின் மீதுள்ள நம்பிக்கையின் மேல் வழங்கியுள்ளார்கள்.

ஈரோடு இடைத்தேர்தல் பொறுத்தவரை பயந்து போய் தான் திமுக வில் அத்தனை பேரும் களத்தில் இறங்கி விதிமீறல்களை செய்தார்கள். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மிக உறுதியாக எடப்பாடியார் தலைமையில் 40 தொகுதிகளையும் வெல்வோம்.

அதன் பின் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...