டாஸ்மாக் டெண்டர் விவகாரம் - அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை!

டாஸ்மாக் டெண்டர் விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரித்துள்ளார்.



கோவை: கோவை கருமத்தம்பட்டியில், விசைத்தறியாளர்கள் ஏற்பாடு செய்துள்ள நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் நாளை பங்கேற்க உள்ளார். இந்த விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



தமிழக முதல்வருக்கு விசைத்தறி நெசவாளர்கள் சார்பில் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக அறப்போர் இயக்கம் ஜெயராமன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இடைத்தேர்தல் நடைபெற்றதால், ஈரோடு நீங்களாக, 43 குடோனில் இருந்து மொத்தம் 96 கோடி ரூபாய்கான வருட டெண்டர் அறிவிப்பில் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் என்பது அபத்தமானது. அவர் கூறியதை திரும்ப பெறவில்லை எனில் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். அப்போது, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி நாகராஜ், நித்தியா மனோகரன், ஏர்போர்ட் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...