கோவையில் பெண்கள் தின விழா - முதல்வருக்கு 7000 பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை அனுப்பிய பெண்கள்!

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற பெண்கள் தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு 7000 தபால் அட்டைகள் மூலம் வாழ்த்துச் செய்திகளை பெண்கள் அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தியாக ஏழாயிரம் தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் முகமது ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பொன்.குமார் பேசியதாவது, தமிழக அரசின் பல்வேறு மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் இந்த திட்டங்களை சரியான முறையில் பெண்கள் பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவோராக மாற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.



நிகழ்ச்சியில் முன்னதாக இந்திய அனைத்து ஆடைகளின் நல அமைப்பின் பெண்கள் சார்பாக ஏழாயிரம் தபால் அட்டையில் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் பயன்பெறும் விதமாக பைகள் தயாரிப்பில் பயிற்சிகள் முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதே போல பசுமையை காக்கும் விதமாக பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற உறுதி மொழியை பெண்கள் ஏற்றுக் கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...