கோவையில் வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட எஸ்.பி!

கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை: ராக்கிபாளையத்தில் வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்க மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் கலந்துரையாடினார்.

தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது. இது போலியான வீடியோ என அரசு மறுத்துள்ளது. இருப்பினும் வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்து சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்க கோவை மாவட்ட போலீசார் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இன்று இந்த நிறுவனத்திற்கு மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் வந்தனர். அப்போது அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்களுடன் எஸ்.பி. பத்ரி நாராயணன் இந்தியில் பேசி கலந்துரையாடினார்.

அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இதுபோன்ற வீடியோக்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம். தொடர்ந்து நீங்கள் வேலை பாருங்கள் என அறிவுரை கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவர்களிடம் பேசிய பிறகு, தொழிலாளர்கள் அனைவரும் பயமின்றி பணியாற்றி வருவது தெரியவந்தது. ஊரில் உள்ள அவர்களின் உறவினர்கள் தான் வீடியோக்களை அனுப்பி இவர்களிடம் கேட்டு வருகின்றனர். இவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து விட்டனர்.

தொடர்ந்து அவர்களுக்கு ஏதாவது குறைகள், புகார்கள் இருந்தால் தெரிவிப்பதற்கு செல்போன்கள் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்நேரம் வேண்டும் ஆனாலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...