உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் சாமி தரிசனம்!

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை அடுத்த சங்கிலி வீதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவின் போது, கருப்பண்ணசாமி பூஜை, திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கொடியேற்றுதல், காப்புக் கட்டுதல், கும்பம், பூவோடு எடுத்து வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் இன்றுநடைபெற்றது. பிரசன்ன விநாயகர் திருக்கோயில் அர்ச்சகர் கிரிவாச பகவதி சிவாச்சாரியார் தலைமையில் ஐயப்பன் கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்தி, பத்ரகாளியம்மன் கோவில் அர்ச்சகர் ஹரிவார சிவம், பரம்பரை கௌரவ பூசாரி முருகானந்தம், உடுமலை டாக்டர் சிவக்கனி சுபாஷ் ஆகியோர் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.



சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்காரத்தில் அருள் பாலித்த பத்ரகாளி அம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பரிவட்டம் கட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாதஸ்வர மேளதாளம், கேரள செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சங்கிலி வீதி, அமணலிங்க வீதி, மற்றும் சதாசிவம் வீதி வழியாக குட்டை திடலை அடைந்தது. அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைதொடர்ந்து இன்று மாலை கொடி இறக்குதல், கும்பம் விடுதல், நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிலையில், நாளை மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...