கோவை பன்னிமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன், ரூ.1.50 லட்சம் கொள்ளை - பரபரப்பு!

கோவை பன்னிமடை அருகே ஆண்டாள் அவென்யூவில் பிரபாகரன் என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: பன்னிமடை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஆண்டாள் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (51). தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் நேற்றைய தினம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கவுண்டம் பாளையத்தில் உள்ள கோவில் விழாவிற்கு சென்றுள்ளனர்.



இந்நிலையில், இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் உள்ள பீரோக்கள் திறந்து அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்துள்ளது.



மேலும் பீரோவில் இருந்த தங்க வளையல், மோதிரம், கம்மல் மற்றும் நெக்லஸ் என சுமார் 6 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.



இதுகுறித்து உடனடியாக தடாகம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் போலீசார் உடனடியாக கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர்.

மேலும் அருகிலுள்ள சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்தபொது அதிகாலை 2 மணியளவில் திருடர்கள் வந்து திருடி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...