நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்..! - கோவையில் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பேச்சு

தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், ஈரோட்டில் மக்களை கூண்டுகளில் அடைத்து வைத்து திமுக இடைத்தேர்தலில் பெற்றிபெற்றுள்ளதாக, கோவை இடிகரையில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75வது பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: கோவை இடிகரை பகுதியில் அ இ அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.



கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

திமுக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, ஈரோட்டில் மக்களை கூண்டில் அடைத்து திமுக வெற்றி பெற்றது. கோவையில் 50 ஆண்டுகளில் செய்யக்கூடிய வளர்ச்சியை 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் செய்து முடித்தோம்.

கோவையில் உள்ள அனைத்து மேம்பாலம், சாலைகள், கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றை அதிமுக ஆட்சியில் செய்தோம். திமுக ஆட்சியில் சாலைகளை தோண்டி மட்டுமே போட்டுள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும், என்றார்.



தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக திரைப்பட நடிகர் வையாபுரி கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர், சிலம்பத்தில் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



மேலும், 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...