கணவனின் சந்தேகத்தால் நேர்ந்த சோகம் - கோவையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

துடியலூர் அருகே செங்காளிபாளையத்தில் மனைவியின் நடத்தையில் கணவன் சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், விரக்தியில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே கணவனின் சந்தேகத்தால் ஏற்பட்ட மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துடியலூர் அருகேயுள்ள செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சர்மிளா (27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் மனைவி சர்மிளா அடிக்கடி செல்போனில் பேசியதாகவும், இதன் காரணமாக அவரது நடத்தையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே சம்பவத்தன்று மீண்டும் கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், விரக்தியடைந்த சர்மிளா, சாணிப்பவுடரை கரைத்து குடித்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சர்மிளாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...