தமிழ்நாட்டில் 500 காவல் உதவி ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் - டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. ஜாதி, மத மோதல் இல்லாமல், சாராயம், கொலை, கொள்ளை போன்றவற்றில் இறப்புகள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருப்பதற்கு தமிழ்நாட்டில் பணியாற்றக்கூடிய 1.34 லட்சம் போலீசார் தான் காரணம் என்று திருச்சியில் நடந்த விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


திருச்சி: தமிழக காவல்துறைக்கு விரைவில் 500 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யவுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழக காவல்துறையின் 62ம் ஆண்டு மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியது. புறா, பலூன்களை பறக்க விட்டு ஒலிம்பிக் ஜோதியை பெற்று கொண்டு போட்டியை துவக்கி வைத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது:



கடந்தாண்டு 10,000 பேர் காவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 3,200 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2021ம் ஆண்டு 1,000 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 1ஆம் தேதி 444 உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி தொடங்கியுள்ளது.

இன்னும் 500 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் 10 சதவீதம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறைக்கு விளையாட்டில் இந்திய அளவில் பெரிய பங்கு உள்ளது. 1,950, 1960ஆம் ஆண்டுகளில் ரோப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அளவில் தமிழக காவல்துறை பங்கேற்றது. 2009ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் திருச்சியை சேர்ந் காவலர் சுப்பிரமணி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த நாகநாதன், 100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். சென்னையில் மாநிலங்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. மத்திய பிரதேசத்தில் கடந்த பிப்ரவரியில் நடந்த புலன் விசாரணை, கைரேகை தொடர்பான போட்டியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு மிக அமைதியாக உள்ளது.சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. ஜாதி, மத மோதல் இல்லாமல், சாராயம், கொலை, கொள்ளை போன்றவற்றில் இறப்புகள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருப்பதற்கு தமிழ்நாட்டில் பணியாற்றக்கூடிய 1.34 லட்சம் போலீசார் தான் காரணம். நாளுக்கு நாள் தொழிற்சாலை, குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே தேவையின் அடிப்படையில் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்", என்றார்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...