உடுமலையில் ஸ்டூடியோவில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

உடுமலை பேருந்து நிலையத்திற்கு அருகே வர்கீஸ் என்பவருக்குச் சொந்தமான ஸ்டூடியோவில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


திருப்பூர்: உடுமலையில் அதிகாலையில் ஸ்டூடியோவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் வர்கீஸ் என்பவர் ஸ்டூடியோ வைத்துள்ளார்.



இவரது ஸ்டூடியோவில் அதிகாலை 3 மணி அளவில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இருப்பினும் கடையிலிருந்த கேமராக்கள், புகைப்படக்கருவிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் சாம்பலானது.



மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



தீ விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...