கோவை வேளாண் பல்கலை எதிரே லாரி விபத்து - போலீசார் விசாரணை

கோவையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே அதிகாலை சுமார் 4.30 மணிக்குச் சென்ற போது, எதிர்பாராத விதமாக டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


கோவை: வடவள்ளி- மருதமலை சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

கோவையில் உள்ள சில கட்டுமான பணிகளில் ஈடுபட்டுவரும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கனரக வாகனம் ஒன்று வடவள்ளி - மருத மலை சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது லாரி அதிகாலை 4.30 மணிக்கு எதிர்பாராத விதமாக டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணி நடந்து வருகின்றது. அதிகாலை விபத்து நடந்ததனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் உறக்கத்தில் வண்டியை ஓட்டியதால் விபத்து நடந்ததா? வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது வேறு என்ன காரணம் என வடவள்ளி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய சாலையில் விபத்து நடந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. லாரியை மீட்ட பின்னர் போக்குவரத்து வழக்கம் போல இயல்புநிலைக்குத் திரும்பியது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...