மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி பலி

கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கட்டிடத் தொழிலாளியான இவர், வேலைக்காக இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது எதிரே சரக்கு வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: மேட்டுபாளையம் அருகே கட்டிடத் தொழிலாளி சென்ற இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (35). கட்டிடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி இரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நாகராஜ் தனக்கு சொந்தமான பைக்கில் சிறுமுகையிலிருந்து வேலைக்காக மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அய்யப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் நாகராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...