இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொடக்கம்..! - கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சிலிண்டர் விலை உயர்வுக்கு ஏதேனும் ஒரு கருத்தையாவது அதிமுகவினர் முன் வைத்தார்களா? அவர்களைப் பொறுத்தவரை மக்களுடைய நன்மைகளில் கவலை இல்லை. அவர்களுக்கு தேவை யார் டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பதுதான் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.



கோவை: கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: திமுக சார்பில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, கோவை அவிநாசி சாலையில் உள்ள பிருந்தாவன் மஹால் வளாகத்தில் 70 ஜோடிகளுக்கான திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து விழா பேரூரை ஆற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாட்டுவண்டி பந்தயத்தினை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.

இதையடுத்து, கோவை வஉசி மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெற உள்ள சாராஸ் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு 2000 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளில் மின் இணைப்பு இன்றுடன் துண்டிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அது நீதிமன்றத்தின் உத்தரவு, எனினும் சட்டவிரோதம் என்பது ஒன்று அல்லது இரண்டு இருக்கலாம் முழுவதுமாக செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுகிறது என்பது ஒரு தவறான கருத்தாக கருதுகிறேன். நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கின்ற இடங்களை தவிர்த்து இதர இடங்களில் செங்கல் உற்பத்தி துவங்குவதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

மலைப்பகுதிகளில் மின் இணைப்பு பல்வேறு இடங்களில் இல்லாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், வருவாய் துறையின் ஆவணங்கள் இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றார். வருகின்ற ஏப்ரல் மற்றும் மே ஆகிய கோடை மாதங்களில் 4200 மெகாவாட் கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகின்ற நிலையில், அதற்கான டெண்டர் போடப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் மின்வினியோகத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது, என்றார்.

6000 மெகாவாட் சோலார் பூங்காவிற்கான டெண்டர் கோரப்படவுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் 99.7 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 3 சதவிகிதப் பணியும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும், என்றார்.

ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி, ஜி.கே வாசன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், அவர்கள் தேர்தல் கடைசி நேர பிரச்சாரம் வரையிலும் ஜெயிப்போம் என கூறினார்கள். வாக்களிக்கும் நாளிலும் ஜெயிப்போம் எனக் கூறி வந்தார்கள். வாக்கு எண்ணிக்கையில் அவர்கள் நினைத்த அளவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் அந்த விரக்தியில் அவர்களது கருத்துக்களை கூறுகிறார்கள்.

அவர்கள் ஆளும் கட்சியாக இருந்த பொழுதும் தேர்தல் நடைபெற்றது தானே? என கேள்வி எழுப்பினார். இந்த இடைத்தேர்தல் தீர்ப்பு என்பது கடந்த ஒன்றரைக்கால திமுக ஆட்சியை அங்கீகரிக்கின்ற வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வழங்கி உள்ளார்கள். இந்த வெற்றிப் பயணமானது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலின் தொடக்கம். 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் அறிவிக்கின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். மக்களுக்கு நன்மை செய்கின்ற வகையிலான இயக்கமாக கட்சியை வழிநடத்த வேண்டும். அந்த சூழல் அவர்களிடம்(அதிமுக) இல்லை.

சிலிண்டர் விலை உயர்வுக்கு ஏதேனும் ஒரு கருத்தையாவது முன் வைத்தார்களா?அவர்களைப் பொறுத்தவரை மக்களுடைய நன்மைகளில் கவலை இல்லை. வருங்கால திட்டங்கள் குறித்து கவலை இல்லை. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் நினைப்பதில்லை. அவர்களுக்கு தேவை யார்? டெல்லியில் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பதுதான்.

அவர்களுடைய சூழல் ஏற்கனவே அடிமையாக இருந்தவர்கள்தானே. யாராவது ஒருவரிடமாவது உண்மையாக இருக்க வேண்டும். ஒன்று மக்களிடம் உண்மையாக இருக்க வேண்டும் அல்லது அந்த பொறுப்புகளை வழங்கியவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் எந்த காலத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...