கோவை மதுக்கரை ஊராட்சியில் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

மதுக்கரை ஊராட்சியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டிலான தரைதளம் அமைக்கும் பணி, ரூ.25.46 லட்சம் மதிப்பில் வளம் மீட்பு பூங்கா புதுப்பிக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 15வது நிதிக்குழு மானியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -நூலக பணிகள் பழுது நீக்கம், ஜே.ஜே.எம்.15 நிதிக்குழு மான்யம் ஒருங்கிணைப்பு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(கிராமின்), பசுமை வீடுகள், 15-வது நிதிக்குழு மான்யம் (வட்டார ஊராட்சி), 15வது நிதிக்குழு மான்யம் (மாவட்ட ஊராட்சி),

புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம், ஒன்றிய பொது நிதிகள் பணிகள் (வட்டார ஊராட்சி), பழங்குடியினர் இருளர் வீடுகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டங்களின் 17.40 கோடி மதிப்பீட்டில் 650 பணிகள் முன் எடுக்கப்பட்டு 303 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 347 பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் மதுக்கரை பகுதியில், ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் தரைதளம் 800 சதுர மீட்டர், மேல் தளம் 800 சதுர மீட்டரில் புதியதாக கட்டப்பட்டு வரும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து மதுக்கரை நகராட்சியில் ரூ.25.46 லட்சம் மதிப்பில் வளம் மீட்பு பூங்கா புதுப்பிக்கும் பணியினையும், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணியினையும், மாவுதம்பதி ஊராட்சியில் ஒரே இடத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 14 வீடுகள் ரூ.33.60 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தொடர்ந்து, நவக்கரை வேளாண்மை உற்பத்தியாளர் சங்க நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், பதிவுகளின்றி பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது அறிந்து கடையின் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சம்மந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மேலும், புதுப்பதி கிராமத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 19 நபர்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் ஒரு வீட்டின் மதிப்பு ரூ.4.62 லட்சம் ஆகும்.

மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.15.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நுகர்பொருள் வாணிப கடையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 9.76 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



புதுப்பதி பழங்குடியின கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜஹான் நாசர், நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி, துணைத்தலைவர் ரமேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தனலெட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...