கோவையிலிருந்து 27ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் விமான சேவை!

கோவை விமான நிலையத்தில் ஓடுபாதை சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், வரும் 27ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் விமான சேவை தொடங்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையிலிருந்து 27ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் விமான சேவை தொடங்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் நாட்டிற்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமான ஓடுபாதை சீரமைப்பு பணி தொடங்கியது.

இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 6 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவது ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த மாத இறுதி முதல் மீண்டும் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் விமானங்கள் இயக்க அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

ஓடுபாதை சீரமைப்பு பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்டன. இதனால் வருகிற 27ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் விமானங்களை இயக்க மத்திய சிவில் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல்(டிஜிசிஏ) அனுமதி வழங்கி உள்ளார். 27ஆம் தேதி முதல் ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானம் வழக்கம் போல அதிகாலை 4.30 மணிக்கு தரையிறக்கப்பட்டு, மீண்டும் 5.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இதேபோல சிங்கப்பூ–ருக்கு இயக்கப்படும் விமானமும் 27ஆம் தேதி முதல் இரவு 9.30 மணியளவில் தரை இறக்கப்பட்டு, மீண்டும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...