நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்..! - என்கவுண்டர் பயத்தில் வீடியோ வெளியிட்ட கோவை ரவுடி!

கோவை காமராஜர் புரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான கெளதம் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் என்கவுண்டர் செய்ய உள்ளதாகத் தகவல் பரவியதை அடுத்து, தான் எந்த தவறும் செய்யவில்லை என கெளதம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கோவை: என்கவுண்டருக்கு பயந்து கோவையை சேர்ந்த பிரபல ரவுடி வீடியோ வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

கோவை காமராஜர் புரத்தை சேர்ந்தவர் கெளதம். இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை, கொள்ளை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், ரவுடி கெளதம் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது ரவுடி கெளதம் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் ரத்தினபுரி போலீசார் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக கெளதம் மனைவி மோனிஷா (21), அவரது சகோதரி தேவிஸ்ரீ (28), மாமியார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவுடி கெளதம், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் கடந்த 8 ஆண்டுகளாக அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டிருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு 7 வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளதால் என்னைச் சுட்டுப் பிடிப்பேன் என்று பயமுறுத்துகின்றனர். என்னை என்கவுண்டர் செய்யவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனை போலீசாரே என்னிடம் தெரிவித்தனர்.

எனது மனைவியை மாமியார் வீட்டில் வைத்துப் பார்த்து வந்தேன். எனக்கு அப்பா அம்மா இல்லை. இதனால் மனைவி மீது கஞ்சா வழக்கு பதிந்துள்ளனர். போலீசார் என்னை நீதிமன்றத்தில் சரண்ட் ஆக கூறுகின்றனர்.

நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த 4 வருடமாக எந்த பிரச்சனையிலும் நான் ஈடுபடுவதில்லை. திருந்தி வாழ்கிறேன். என்னைச் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். எனக்குத் தீர்வு வேண்டும்.

இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...