பல்லடம் அருகே அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு

பல்லடம் அருகே வாவிபாளையத்தில் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருடுவதாகக் கூறி மின் இணைப்பைத் துண்டிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருடுவதாகக் கூறி மின் இணைப்பைத் துண்டிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாய் பிரதான கால்வாய் சுமார் 130 கிலோமீட்டர் தூரத்திற்கும் கிளை கால்வாய்கள் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன.



கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் பெருமளவில் திருடப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்ததை அடுத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்குத் தொடுத்த நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதல் படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி கால்வாயிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் மின் இணைப்பைத் துண்டிக்கக் கடந்த ஆறு மாதங்களாக பொதுப்பணித்துறை சார்பில் விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வளைய பாளையம், வாவிபாளையம் ஆகிய பகுதிகளில் 12 விவசாயிகள் வாய்க்காலிலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளதாகக் கூறி மின் இணைப்பைத் துண்டிப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் வந்திருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்பைத் துண்டிக்க வந்த அதிகாரிகளைச் சிறை பிடித்தனர்.

பி ஏ பி வாய்க்காலுக்காக நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு கூட இன்னும் வாங்காத நிலையில் சிறு விவசாயிகளின் மின் இணைப்பைத் துண்டிப்பது நியாயமா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 12 விவசாயிகளின் மின் இணைப்பை மட்டும் துண்டிக்காமல் அனைத்து விவசாயிகளின் மின் இணைப்பையும் துண்டித்து விடுங்கள் எனத் தெரிவித்தனர். இதனால் மின் இணைப்பு துண்டிக்க வந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.



மேலும் வறட்சி பகுதியாக இருந்த திருப்பூர் கோவை மாவட்டங்களில் பிஏபி வாய்க்கால் திட்டம் வந்த பின்பு தான் விவசாயம் செழிப்படைந்ததாகவும் திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல் நீதிமன்ற உத்தரவு எனக் கூறி அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும், நீதிமன்ற உத்தரவை மீண்டும் பரிசீலனை செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...