உடுமலை அரசு பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி தீவிரம்

நமது பசுமை பள்ளித் திட்டத்தின் கீழ் உடுமலையில் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல், முருங்கை, கொத்தவரை, கீரை, தக்காளி, பொரியல் தட்டை விதைகளை விதைத்து குறுந்தோட்டம் அமைக்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பள்ளியில் காய்கறித்தோட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நமது பசுமை பள்ளித் திட்டத்தின் கீழ் குறு காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவைச் சேர்ந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல் உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளை விதைத்தனர்.



ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வுக்கு உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், பாரதியார் நூற்றாண்டு மகளிர் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் தலைமை தாங்கினர்.



கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவைச் சேர்ந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல், முருங்கை, கொத்தவரை, கீரை, தக்காளி, பொரியல் தட்டை உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளை, விதைத்து குறுந்தோட்டம் அமைக்கும் பணியினை மேற்கொண்டனர்.

இந்த காய்கறித்தோட்டத்தின் மூலம் கிடைக்கும் காய்கறிகளை மதிய சத்துணவுக்குப் பயன்படுத்துவதன் மூலம் தாங்களே விளைவித்த காய்கறிகளை தாங்களே உண்ணும் சந்தோஷம் மாணவிகளுக்குக் கிடைக்கும்.

அத்துடன் காய்கறித்தோட்டம் உருவாக்குவதில் ஆர்வம் ஏற்பட்டு வீடுதோறும் காய்கறித் தோட்டம் அமைப்பதன் மூலம் சத்தான, புத்தம் புதிய, ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகளை அனைவரும் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் துறைத்தலைவர் பிருந்தா, ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, மணிமேகலை, ரம்யா, சத்யப்ரியா மற்றும் தமிழ்துறை மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...