கோவையில் பிரசித்திபெற்ற கோனியம்மன் கோயில் திருவிழா - இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்!

கோவை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்றான கோனியம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு, இஸ்லாமிய மக்கள் குளிர்பானம், தண்ணீர் வழங்கி தாகம் தீர்த்தது பலரின் பாராட்டையும், கவனத்தையும் பெற்றுள்ளது.


கோவை: கோவையில் உள்ள ஆன்மீக தலங்களில் மிகவும் பிரபலமான ஆன்மீக தளம் கோவையை காக்கும் காவல் தெய்வம் கோனியம்மன் திருக்கோயில் . இங்கு வருடம் தோறும் நடைபெறும் கோனியம்மன் கோயில் தேர் திருவிழா ஆன்மீக பக்தர்களால் பரவசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி, கோயின் டவுன்ஹால் வீதி ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் இந்து ஆன்மீக பக்தர்களால் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில், கொளுத்தும் வெயிலில் தேர் திருவிழாவில் பங்கேற்றிருக்கின்ற பக்தர்களுக்கு குளிர் பானம், தண்ணீர் தேவைப்படும். தேர் செல்லும் பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஆன்மீக அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் விநியோகம் செய்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை கோனியம்மன் தேர் திருவிழாவுக்கு வருகின்ற இந்து பக்தர்களின் தாகத்தை, இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டிலை தந்து தாகம் தீர்த்து வருகின்றனர்.



போத்தீஸ் துணிக்கடை எதிரே உள்ள அத்தார் ஜமாத் நிர்வாகிகள், தேர் செல்கின்ற பாதையில் பள்ளி வாசலில் பக்தர்களுக்கு தொடர்ந்து தண்ணீர் பாட்டில்களை தந்து வருகின்றனர். 10 ஆண்டுகளாக இந்த நற்பணியை செய்து வருகின்ற இஸ்லாமிய மக்கள், இன்று மட்டும் சுமார் 10,000 குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்துள்ளனர்.

மதங்கள் வேறாயினும், மனம் ஒன்று தானே என்பது போல, மதத்தால் வேறுபட்டிருந்தாலும், மனங்களால், இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடின்றி இவர்களின் செயல்பாடுகள் அமைந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்துக்களோ இஸ்லாமியர்களோ அனைவருமே தங்களின் சகோதரர்கள் என்று தெரிவித்திருக்கின்ற ஜமாஅத் நிர்வாகிகள், ரம்ஜான், பக்ரீத் போன்று கோனியம்மன் கோயில் தேர் திருவிழாவும் தங்களின் பண்டிகையை என்று நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

எங்களுக்குள் சாதி மத வேத பாகுபாடு இல்லை என்பதுபோல, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில், வருடம் தோறும் இந்துகளுக்கு தண்ணீர் தந்து தாகத்தை தீர்த்து வரும் இஸ்லாமியர்கள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தொடர்ந்து இந்த திருப்பணியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...