முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா - கோவையில் பார்வையற்ற மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணாப்பாளையம் பகுதியிலுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுகவினர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை தொண்டாமுத்தூர் சாலை ஓணாப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் பார்வையற்றோருக்கான அரசு ஆரம்பப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுடன் திமுகவினர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடினர். திமுக உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பாண்டி ஏற்பாட்டில் முதல்வரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



திமுக உறுப்பினரும் சமூக ஆர்வலருமான பாண்டி ஏற்பாட்டில் முதல்வரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட வடவள்ளி பகுதி கழக செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம் பள்ளி மாணவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.



தொடர்ந்துமாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது குழந்தைகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...