மேட்டுப்பாளையம் அருகே பைக் மின் கம்பத்தில் மோதியதில் வாலிபர் பலி

மேட்டுப்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிவக்குமார் எனும் இளைஞர் சம்பவ இடத்தில் பலியானார். அவருடன் வந்த நண்பர் அஜித்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சித்தன் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவருக்கு நித்திய பிரியா (30) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அஜீத்குமார்(26) என்பவரும் உறவினர்கள்.

இருவரும் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருப்பூரிலிருந்து சிவக்குமாரை சித்தன்குட்டையில் விடுவதற்காக அஜீத்குமார் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் இரும்பறை - பெத்திக்குட்டை சாலையில் சென்றார்.

அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அஜித்குமார் லேசான காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார், விரைந்து சென்று விபத்தில் பலியான சிவகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...