பல்லடத்தில் எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை உடைத்து கொள்ளை

பல்லடம் பனப்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: பல்லடம் பனப்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர் பல்லடம் பணப்பாளையத்தில் விக்னேஷ் எலக்ட்ரிகல்ஸ் என்ற எலக்ட்ரிக்கல் கடையை நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல கடைக்குச் சென்ற ரத்தினசாமி கடையை திறந்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் கடையிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.



இச்சம்பவம் குறித்து ரத்தினசாமி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் கடைக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்மநபர் ஒருவர் கடையின் மேற்கூரையை உடைத்து கடைக்குள் இறங்கி வயர்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...