வேங்கை வயல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்..! - தாராபுரத்தில் தடா பெரியசாமி வலியுறுத்தல்

திமுக அரசு தங்களை திராவிட அரசு, சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொண்டு வருகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் 10,461 கோடி ரூபாயை திமுக அரசு ஏமாற்றி உள்ளதாக பாஜக பட்டியலின பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி குற்றச்சாட்டினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவு சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், பட்டியலின அணியின் மாவட்ட தலைவர் சித்தார்த்தன் வரவேற்றார்.



பாஜக மாநில பட்டியலின பிரிவு தலைவர் தடா பெரியசாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தடா பெரியசாமி கூறியதாவது:



திமுக அரசனது பட்டியலின சமூகத்தை வஞ்சித்து வருகிறது. பட்டியல் சமூகத்திற்கு மத்திய அரசாங்கம் ஏராளமான நிதியை ஒதுக்கி வருகிறது. மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் திமுக அரசு செலவு செய்யாமல் மனம்போன போக்கில் செலவு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.

22 -23 நிதியாண்டில் மட்டும் 16,442 கோடி அதில் பத்தாயிரத்தி நானூத்தி அறுபத்தாறு கோடி செலவு செய்யாமல் இருக்கிறது. திமுக அரசு தங்களை திராவிட அரசு, சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொண்டு வருகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் 10,461 கோடி ஏமாற்றிக் கொண்டு இருக்கும் அரசு திமுக அரசு.

நேற்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த செய்தியை பத்திரிகையாளர்களிடம் முன் வைத்தார் அதற்கு இதுவரை திமுக அரசின் முதல்வரோ, தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜோ இதுவரை வாய் திறக்கவில்லை.

அந்த அளவிற்கு பட்டியல் சமூகத்தை ஏமாற்றி சமூக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல் பட்டு வருகிறது. இதேபோன்று 2010 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி இருந்தபோது, பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் செலவு செய்யாமல் அதை எடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டார்கள். அந்த அளவிற்கு ஏமாற்றி வருகின்றனர்.

இதை போன்று சமத்துவபுரம் என்று இந்த நிதியை எடுத்து செலவு செய்தார். தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பட்டியலின மக்களை ஏமாற்றுவதை நிறுத்தவில்லை என்றால் திமுக அரசை கண்டித்து எதிர்வரும் ஆறாம் தேதி தமிழக முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறியாமல் வேறொரு விஷயத்தை திசைமாற்றம் செய்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் ஏமாற்றி விட்டீர்கள். மாவட்ட ஆட்சியரை கண்டித்து வந்ததாகவும் இதைத் தாண்டி காவல்துறையினர் சிபிசிஐடிக்கு அனுப்பினார்கள். நாங்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டுள்ளோம்.

உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க வேண்டும். குற்றவாளி யார் என்று காவல்துறைக்கும் தெரியும். உண்மை குற்றவாளிகளை மறைக்க பார்க்கிறார்கள். அதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென நாங்கள் கேட்கிறோம்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...