கோவை கருமத்தம்பட்டியில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் - வடமாநில வாலிபர் கைது

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணிநந்தர் மகாநந்தா என்பவரை கைது செய்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை, பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கருமத்தம்பட்டி கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கஞ்சா விற்பனைக்குப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், தலைமையிலான காவல்துறையினர் கருமத்தம்பட்டிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹரிமகாநந்தா என்பவரது மகன் மணிநந்தர் மகாநந்தா(32) என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...