கோயம்புத்தூரில் 35 தேர்வு மையங்களில் குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற 19.02.2017 (முற்பகல் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தொகுதி I–க்கு உட்பட்ட (Group I) பதவிக்கான  எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது. கோயம்புத்தூரில் 35 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகின்றது.  இத்தேர்வினை 10208 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வினை நடத்த 35 முதன்மை கண்காணிப்பாளர்கள், 10 மொபைல் அலுவலர்கள், 5 பறக்கும் படையினர், 24 வீடியோ கிராபர்கள் மற்றும் 35 ஆய்வு அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இத்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு காவல்துறையினரால் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்  வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டு (Hall Ticket) கொண்டு செல்ல வேண்டும் எனவும் தேர்வு அறைக்குள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னியக்க கருவிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...