புத்தக வாசிப்பை ஏற்படுத்தும் 'புக்ஸ் ஆன் வீல்' ஆட்டோ நூலகம் - கோவையில் தொடக்கி வைத்தார் காவல் ஆணையர்!

கோவையில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன் ‘புக்ஸ் ஆன் வீல்’ என்ற தலைப்பில் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 500 ஆட்டோ நூலகங்களை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவையில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் 500 ஆட்டோக்களில் அமைக்கப்பட்ட நூலகத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கோவையில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் பங்களிப்புடன் பொதுமக்களிடம் வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் வகையில் புக்ஸ் ஆன் வீல் (Books On Wheel)என்ற தலைப்பில் 500 ஆட்டோக்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டோ நூலகத்தின் திறப்பு விழாவில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நூலகத்தை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

இதுபோன்ற ஆட்டோ நூலகம் மற்றும் தெருமுனை நூலகங்களை இதற்கு முன்பும் திறந்து வைத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக KIT பங்களிப்புடன் தற்போது மாநகரில் உள்ள 500 ஆட்டோக்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் இந்த புத்தகங்களை வாசித்து பயனடையும் விதமாக இது அமைந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநருடன் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். இந்த உறவை பலப்படுத்த இது ஒரு புதிய முயற்சியாக எடுத்துள்ளோம்.

இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனக்கவலையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். கோவை மாநகரில் மோசடி வழக்குகள் குறித்து FIR பதிவு செய்து வருகின்றோம். இதுகுறித்து அதிகப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பத்திரிக்கை, ஊடகத்துறை, நண்பர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது சம்பந்தமான பல்வேறு செய்திகளை வெளியிட்டால் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய உதவியாக இருக்கும். மோசடி வழக்குகளில் யாராவது ஏமாற்றப்பட்டு இருந்தால் உடனடியாக காவல்துறையை அணுகலாம் அவ்வாறு அணுகும் பட்சத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்கள், போக்குவரத்து விதிகளை மீறும் இளைஞர்கள் என அனைவரையும் அழைத்து முறையான போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...