போலீஸ் எனக்கூறி கோவையில் கைத்தறி உரிமையாளரிடம் நகை பணம் பறிப்பு

கரூரை சேர்ந்த கைத்தறி உரிமையாளரான ரவி செல்வம் என்பவரிடம் போலீஸ் எனக் கூறி மர்மநபர்கள் அழைத்துச் சென்று, ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை வந்த கைத்தறி உரிமையாளரிடம் போலீஸ் எனக் கூறி நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் ரவி செல்வம் (38), கைத்தறி உரிமையாளரான, இவர் அடிக்கடி தொழில் நிமித்தமாகக் கோவை வருவது வழக்கம். அப்படி வரும்போதெல்லாம் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் தங்குவார்.

இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த அவர் அங்குத் தங்கினார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி அங்கு வந்த சிலர், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கரூருக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அன்றிரவு ரவி செல்வம் மீண்டும் கோவை திரும்பினார். அடுக்குமாடிக்குடியிருப்புக்குச் சென்ற போது, அங்கு அலமாரியில் வைத்திருந்த முக்கியமான ஆவணங்கள், ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து ரவி செல்வம் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவி செல்வத்தை விசாரணைக்கு என அழைத்துச் சென்றவர்கள் யார்? திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...