உடுமலையில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

உடுமலை அருகே நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, வரும் காலங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்கள் ஆதரவுபெற்று ஆட்சி அமைக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்தமடத்துக்குளம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், முன்னாள் அமைச்சரும், கட்சியின் கோவை மேற்கு ஒன்றிய பொறுப்பாளருமான சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்றது.



பொதுக் கூட்டத்தில் சண்முகவேலு பேசுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். எம்ஜிஆர் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும்விரிவுபடுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தற்போது திமுக அரசு செயல்படுத்தி வருகின்றது.



தாலிக்கு தங்கம் சத்துணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. வரும் காலங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்கள் ஆதரவுபெற்று ஆட்சி அமைக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

அமைப்புச் செயலாளரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான தொட்டியம் ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.பழனி குமணன், மணிகண்டன், பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், பேரூர் கழகச் செயலாளர் தளபதி நடராஜ், உடுமலை நகர கழக செயலாளர் கே ஆர் பி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்வீட் ஆனந்தன், உடுமலை நகரக் இணைச் செயலாளர் பனியன் துரை உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...