தாராபுரத்தில் குறும்பட வெளியீட்டு விழா - சாதனை நாயகனின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

தாராபுரத்தில் இளைஞர்களை சாதனை நாயகர்களாக மாற்றும் நோக்கில் கட்டுமான தொழிலில் சாதனை படைத்த மணிவே சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவன இயக்குனர் சுப்ரமணி தமது வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக தயாரித்து வெளியிட்ட நிகழ்ச்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், மணிவே சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவன இயக்குனர் சுப்பிரமணியம் தனது வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக தயாரித்து வெளியிடும் நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது.

தாராபுரத்தில் மணிவே சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ஆப்பிள் சிட்டி, சிங்கப்பூர் சிட்டி உட்பட பல்வேறு நவீன வீட்டு மனைகளை உருவாக்கி கடந்த 15 ஆண்டுகளில் சாதாரண நகராக இருந்த தாராபுரத்தை சாதனையாளர்கள் விரும்பும் நகராக மாற்றிய நபர்களின் வரிசையில் மணிவே சிட்டி டெவலப்பர்சின் இயக்குனர் சுப்பிரமணியத்திற்கு பெரும் பங்கு உண்டு.



சாதாரண விவசாய குடும்பத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த சுப்பிரமணி. ஆரம்பத்தில் ஆம்வே தொழிலில் கால்பதித்து தனது கடின உழைப்பால் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மட்டும் மூலதனமாக கொண்டு முன்னேற்றப்பாதையில் முதல் அடியை எடுத்து வைத்தார்.



15 ஆண்டுகளுக்குப் பின் இன்று தாராபுரம் புறநகர் பகுதிகளில் காணும் இடங்களில் எல்லாம் அவர் கட்டித் தந்த கட்டிடங்கள், அவர் உருவாக்கிய நகரங்கள், நவீன சிங்கப்பூர் நகரத்தையே நமது நினைவுக்கு கொண்டு வருகிறது.



முன்னேற துடிக்கும் ஏராளமான இளைஞர்கள் அதற்கான முயற்சியை எடுக்காமல் மாற்று வழியை தேடி சமுதாயத்தில் சீரழிந்து வரும் நிலையில், அந்த இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக தன்னைப்போல அத்தனை இளைஞர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் தனது 15 ஆண்டுகால சாதனைகள், அதனால் ஏற்பட்ட முன்னேற்றங்கள், அதனால் பயன் பெற்று வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் என அனைத்தையும் தொகுத்து ஒரு குறும்படமாக தயாரித்துள்ளார் சுப்பிரமணியம்.

இந்த குறும்படத்தை வெள்ளித்திரையில் வெளியிடும் நிகழ்ச்சி தாராபுரம் எஸ்.வி.ஆர் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. ஒரு சாதாரண மனிதனின் சாதனைப் பயணத்தை விளக்கும் இந்த குறும்படம், எதிர்கால இளைஞர்களை நல்வழிக்கு மாற்றும் என்ற நம்பிக்கையை மனதில் பதிய வைத்ததாக பார்வையாளர்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் சென்னை, கோவை, திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கட்டிட கலை நிபுணர்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...