உடுமலையில் கூடுதல் நெல் உலர் களங்கள் அமைக்க வேண்டும் - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை காலத்தில் உலர் கலங்கள் இல்லாததால் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதால் அப்பகுதியில் கூடுதல் உலர் கலங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கூடுதல் நெல் உலர் களங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் குமரலிங்கம், கண்ணாடி புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 4,686 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையிலிருந்து தண்ணீர் திறப்பை அடுத்து குறுகிய கால நெல் ரகங்கள் அங்கு சாகுபடி செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக நெல் சாகுபடி உள்ளது.



ஆனால், இப்பகுதியில் உலர் களங்கள் வசதி இல்லாத காரணத்தால் அறுவடை சீசனில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சீசன் சமயத்தில் பாலம் மற்றும் சாலைகளில் உலர வைக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, நெல் அறுவடை சீசன் சமயத்தில் போதிய உளர் களங்கள் இல்லாததால் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. சிறு,குறு விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நெல்லை, கொண்டு செல்ல வாகன செலவு அதிகரிப்பதால் தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும், ஈரப்பதத்தை காரணம் காட்டி வியாபாரிகள் விலை நிர்ணயிப்பதில் பாரபட்சம் காட்டுகின்றனர். சாலைகளில் காயவைக்கும்போது நெல்மணிகளின் தரம் பாதிக்கப்படுகிறது.

நெல் அதிகளவு சாகுபடியாகும் பகுதிகளில் சாகுபடி பரப்பை கணக்கிட்டு கூடுதலாக உலர் களங்கள் கட்ட மாவட்ட வேளாண்மை விற்பனை குழு வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...